பிரான்சில் உள்ள Les Déserts நகராட்சியில் சிறிய ரக விமானம் ஒன்று சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் சுவிஸ் நாட்டவர்கள் இரண்டு பேர் இருந்தனர்.
63 வயதான விமானிக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், 55 வயது பெண் பயணி சிறிய காயங்களுடன் தப்பினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் Annemasse விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, Aix-en-Provence நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இயந்திரம் செயலிழந்ததால், விமானி அவசரமாக தரையிறங்க முயன்றார். தரையிறங்கியவுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
அதைக் கண்டவர்கள், உடனடியாக அவசர சேவைக்கு தகவல் அளித்து பயணிகளுக்கு முதலுதவி அளித்தனர்.
மூலம் – 20min

