Horgen இல் A3 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் 32 வயதான சாரதி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர், சூரிச் நோக்கிய A3 நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
இன்னும் தெளிவாகத் தெரியாத காரணங்களுக்காக வீதியின் இடது பக்கத்துக்கு காரைத் திருப்பிய போது, வாகனம் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தை அடுத்து சூரிச் நோக்கிய திசையில் A3 நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டது.

