-0.5 C
New York
Sunday, February 15, 2026

வவுனியா கொலை – இன்னொரு சுவிஸ் வாசி கைது.

வவுனியா – கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் சுவிசில் இருந்து சென்ற ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,  மற்றொரு சுவிஸ் வாசி உள்ளிட்ட இரண்டு  பேர்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐயனார் கோவில் திருவிழாவின் பின்னர் அங்குள்ள வீடொன்றில் சுவிசில் இருந்து சென்றவரும்.  அவரது உறவினரும் தங்கியிருந்தனர்.

இருவரும் இரவு மது அருந்தி விட்டு வீட்டில் உறங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால், ஒருவர் இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்ட, சுவிசில் இருந்து சென்றவர்  கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,  கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில்,  அண்மையில் சுவிசில் இருந்து  சென்று வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த  ஒருவரும் கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த சிசிடிவி கமராவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles