19.8 C
New York
Thursday, September 11, 2025

ஜெர்மனியில் பேருந்துக்குள் கத்திக்குத்து – 5 பேர் காயம்.

ஜெர்மனியில்,  Siegen-Eiserfeld பகுதியில், பேருந்து ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து,  32 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

மேலும் ஆபத்து இல்லை என்றும்,  தீவிரவாத பின்னணி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற பெருந்தில் 40 பயணிகள் இருந்தனர் என்றும் அவர்கள் Siegen நகரின் 800 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles