Vaud மாகாணத்தில் La Tour-de-Peilz உள்ள மேல்நிலைப் பாடசாலையில், Legionella பக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலையின் விளையாட்டு கட்டடத்தின் சுடு நீர் குழாய்களில், செவ்வாய்க்கிழமை மாலை, Legionella பக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பக்டீரியாக்கள் ஆபத்தான Legionnaires நோயை ஏற்படுத்தும்.
இதனால் முன்னெச்சரிக்கையாக, மாணவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து நோய் பரவாமல் தடுக்க கட்டடத்தில் உள்ள அனைத்து சுடுநீரை் குழாய்களும் மூடப்பட்டுள்ளன.
நீர் குழாய்கள் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் வரை இந்த மூடுதல் நடைமுறையில் இருக்கும்,
இருப்பினும், பாதுகாப்பு அறைகள் மற்றும் கழிப்பறைகள் அணுகக் கூடியதாக இருக்கும்.
உயர்நிலைப் பாடசாலை மாணவர்களிடையே தற்போது யாருக்கும் தொற்று பரவவில்லை என்று கன்டோனல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min