SVP அரசியல்வாதிகளான Marco Chiesa மற்றும் Peter Keller ஆகியோரின் சிறப்புரிமையை நீக்குமாறு பேர்ன் நீதித்துறை பெடரல் நாடாளுமன்றத்திடம் கோரியுள்ளது.
2023 ஒக்ரோபர் மாதம், இவர்கள் இருவர் மீதும் பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பாகுபாடு தடுப்பு சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு “புதிய இயல்புநிலை?” என்ற தொனிப்பொருளிலான SVPயின் பிரச்சாரம், பாகுபாடு எதிர்ப்பு விதிமுறையை மீறியுள்ளதாக பேர்ன் நீதித்துறை விசாரணைகளை ஆரம்பித்தது.
அந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட போது, SVP கட்சியில், Marco Chiesa தலைவராகவும், Peter Keller பொதுச் செயலாளராகவும் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டு SVP அரசியல்வாதிகளின் தண்டனை விலக்குரிமையை தள்ளுபடி செய்யுமாறு பெடரல் நாடாளுமன்றத்திடம் அது கோரியுள்ளது.
மூலம் -Bluewin