சூரிச் ஏரியில் உள்ள Oberrieden இல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் 11.45 மணியளவில் கட்டடம் ஒன்றில் தீ பரவத் தொடங்கியதாக சூரிச் பொலிசார் தெரிவித்தனர்.
தீயினால் கடும் புகை மற்றும் துர்நாற்றம் வீசி வருவதால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளை, ஜன்னல், கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அருகில் உள்ள கட்டடங்களுக்கும் தீ பரவும் அபாயம் உள்ளது.இதனால் பெருமளவு தீயணைப்பு பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மூலம் – 20min