சூரிச்சின் பசுமை கட்சி அரசியல்வாதியான பஸ்டியன் ஜிரோட், இலையுதிர்கால அமர்வுக்குப் பின்னர், தேசிய கவுன்சிலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் கடந்த 17 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
தற்போது, சூழலியல் மற்றும் நிலைத்தன்மையை செயற்படுத்த வணிகத்தின் பக்கம் பணியாற்ற வேண்டிய நேரம் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இவர் பதவி விலகுவதை அடுத்து. 2023 தேர்தலில், இவருக்கு அடுத்த நிலையில் இருந்த Meret Schneider, தேசிய கவுன்சின் உறுப்பினராக நியமிக்கப்படுவார்.
பதவி விலகும், ஜிரோட் 2007 இல் முதன்முதலில் தேசிய கவுன்சிலுக்கு 26 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது பதவிக் காலத்தில், பல முக்கியமான திட்டங்களைச் செய்து முடிக்க முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூலம் – zueritoday