15.8 C
New York
Thursday, September 11, 2025

சோள வயலுக்குள் புகுந்த கார்.

Egerkingen இல் இடம்பெற்ற விபத்தில், 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் Egerkingen நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, நேற்றுக்காலை8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து வட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு விளம்பர பலகை மீது மோதி, இரண்டு சோள வயல்களுக்குள் புகுந்து, ஒரு வயல் பாதையின் விளிம்பில் நின்றது.

மருத்துவப் பிரச்சினையே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என  Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம் – Bluewin

Related Articles

Latest Articles