சூரிச்சின் Oberrieden பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட தீவிபத்தினால் பாரியளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 11.45 மணியளவில் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
3 மாடிகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவுகின்ற ஆபத்து இருந்ததால், தீயை அணைக்க அதிகளவிலான தீயணைப்பு பிரிவினர் பல மணி நேரம் போராடினர்.
இந்த தீவிபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
எனினும் இலட்சக்கணக்கான பிராங் சொத்து இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த தீவிபத்தை அடுத்து 12 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – zueritoday