சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில், இன்டிகோ விமான நிறுவனம் புதிய விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளது.
இன்று முதல் தினமும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை நடத்தப்படும் என இன்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் விமானம் சென்னையில் இருந்து 52 பயணிகளுடன் இன்று பிற்பகல் 3.07 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்போது வாத்திய இசையுடன், பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.
இதன் பின்னர் விமானம் சென்னை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் சென்னைக்குப் பயணத்தை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில் தற்போது தினமும் இரண்டு விமான சேவைகள் இடம்பெறுகின்றன.