16.1 C
New York
Friday, September 12, 2025

சஜித் பக்கம் சாய்ந்தது தமிழ் அரசு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க  இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

பல மணிநேரமாக இடம்பெற்ற  கூட்டத்தில், மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள அரியநேந்திரன், தேர்தல் களத்திலிருந்து விலக வேண்டும் எனவும்   இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும்,  ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கொடுப்பதெனவும் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles