சுமார் 1000 அல்போர்ன் ( alphorn)இசைக் கலைஞர்கள் நேற்று Klewenalp இல் ஒன்றாக இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்துள்ளனர்.
மிகப்பெரிய அல்போர்ன் இசைக் குழுமம் என்ற உலக சாதனையை படைக்கும் இந்த முயற்சியில் பல்வேறு மெல்லிசைகள் இசைக்கப்பட்டன.
ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து, பிரஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து, டிசினோ மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அல்போர்ன் இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மிகப் பெரிய அல்போர்ன் குழுவாக ஐந்து நிமிடங்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்தி ஏற்கனவேஇருந்த உலக சாதனையை முறியடித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
இந்தச் சாதனையை படைக்க 555 இசைக்கலைஞர்களே தேவைப்பட்ட போதும், 1,000 இசைக்கலைஞர்கள் பங்கேற்று இந்த கின்னஸ் சாதனையைப் படைத்தனர்.
1600 மீற்றர் உயரத்தில் இந்த உலக சாதனை படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மூலம் – zueritoday