சூரிச்சில் கத்தி இல்லாத வலயங்களை அறிவிக்க SVP கட்சி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ஏரிக் கரையோரங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த கத்தி இல்லாத வலயங்களை பிரகடனம் செய்வதற்கு இந்த யோசனை சூரிச் நகர சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த வாரம், Niederdorf இல் நடந்த கிராமத் திருவிழாவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில், ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தெரு அணிவகுப்பில், இளைஞன் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார்.
மார்ச் மாதம், 15 வயது IS ஆதரவாளர் ஒரு ஆர்த்தடாக்ஸ் யூதரை கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.
சூரிச்சில் அதிகமான இளைஞர்கள் – குறிப்பாக ஆண்கள் – தங்களுடன் கத்தியை கொண்டு செல்கின்றனர்.
சூரிச்சின் 2023 ஆம் ஆண்டு குற்றப் புள்ளிவிவரங்களின்படி, ஐந்து ஆண்டுகளில் கத்தி தாக்குதல்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது .
2019 இல் 50 சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த ஆண்டு கத்தி தாக்குதல்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஏரிக் கரையோரங்கள், ரயில் நிலையங்கள், கிளப் கள், பொது பூங்காக்கள் அல்லது திறந்தவெளி நிகழ்வுகள் போன்றவற்றில், கத்திகள் தடை செய்யப்பட்ட வலயங்களை உருவாக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து, தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பாடசாலைகளிலும் கத்தி தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூலம் – 20min