ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், கட்சிக்குள் முரண்பாடு வெடித்துள்ளது.
வவுனியாவில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்காத தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்த முடிவு, கட்சியின் முடிவு அல்ல என்றும், இந்த முடிவு குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதேவேளை, மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கூட்டுத் தீர்மானம் தான் என்று தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு இன்று, கட்சியின் துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானம் தமிழ் அரசுக் கட்சிக்குள் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் கட்சி பிளவுபடும் நிலை ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.