26.5 C
New York
Thursday, September 11, 2025

புகலிடம் நிராகரிக்கப்பட்ட 4500 பேரை திருப்பி அனுப்ப திட்டம்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 4500 பேர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.

ஜெர்மனியில் நடந்த தீவிரவாத தாக்குதல் மற்றும், டாவோசில் யூத சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சுவிற்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

டாவோசில் யூத சுற்றுலாப் பயணி மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்  குற்றவாளிகள், இன்னும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளதாக  Graubunden கன்டோனின் நீதி மற்றும் பாதுகாப்பு இயக்குனர் Peter Peyer தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களிடம் கடவுச்சீட்டு இல்லாததால், அவர்களை  தாய்நாட்டிற்கு அனுப்ப முடியாதுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுவிஸ் சட்டத்தின் படி, தடுப்புக்காவல் உத்தரவு நிலுவையில் உள்ள நிலையில்  நாடுகடத்துவது சாத்தியமில்லை.

இந்த நிலையில், இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் (SEM) தற்போது மூன்றாவது நாடு அல்லது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

தற்போது 4,500 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற போதும்,  அவர்களில் 2,500 பேரிடம் கடவுச்சீட்டு இல்லை, 442 பேரின் திட்டமிட்ட நாடு திரும்புவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles