A2 நெடுஞ்சாலையில் Erstfeld அருகே நான்கு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு காரணமாக Taubach சுரங்கப்பாதை பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
இதன் விளைவாக நான்கு கார்கள் பின்பக்கமாக மோதியதாக உரி கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட சேதம் சுமார் 130,000 பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் துப்புரவு பணி காரணமாக, தெற்கு திசையில் உள்ள A2 நெடுஞ்சாலையை சுமார் ஒன்றரை மணி நேரம் மூட வேண்டியிருந்தது.
மூலம் -Zueritoday