21.4 C
New York
Sunday, May 17, 2026

இரண்டாவது வாக்கை சஜித்திற்கு கேட்கிறார் பீரிஸ்.

தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண வணிகர் கழகத்திடம் கோரியுள்ளனர்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின்  பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே  இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குங்கள் என்று கூறியதாக இ.ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles