0.8 C
New York
Monday, December 29, 2025

அமோனியா வாயு கசிவு- அலேட்சுவிஸ்  எச்சரிக்கை.

Pfäffikon நகராட்சியில் உள்ள ஒரு நிறுவனத்தின் கட்டடத்தில் உள்ள வெப்ப பம்ப்பில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அலேட்சுவிஸ்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும், காற்றோட்ட மற்றும் குளிரூட்டி  அமைப்புகளை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒருவர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

பாதுகாப்பு கவச உடையில் பலர் கட்டடத்திற்குள் சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் ஒரு அம்புலன்ஸ் காணப்படுகிறது.

சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles