ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சுவிட்சர்லாந்து தூதரகம் மீளத் திறக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஈராக்கில் முதல் முறையாக தூதரகத்தை இன்று திறந்துள்ளது சுவிஸ்.
அங்கு பாதுகாப்பு நிலைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை அடுத்தே, தூதரகம் மீளத் திறக்கபட்டதற்கு முக்கிய காரணம் என சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
1991இல் குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்பை அடுத்து, வெடித்த வளைகுடாப் போர் காரணமாக, பாக்தாத்தில் இருந்த தூதரகத்தை சுவிஸ் மூடியது.
மூலம்- Swissinfo