Valais இன் மேல் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், கன்டோனல் வீதியின் ஒருபகுதி மண் சரிவில் புதைந்துள்ளது.
இதையடுத்து. Saas Valley வெளியுலகுடனான தொடர்புகளை இழந்துள்ளது.
நிலச்சரிவைத் தொடர்ந்து, Stalden மற்றும் Saas-Almagell இடையே Saas Valley கன்டோனல் சாலை நேற்று மூடப்பட்டது.
கனமழை காரணமாக, ஏனைய பகுதிகளில் மேலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மூலம் – zueritoday