19.8 C
New York
Thursday, September 11, 2025

சர்வதேச ரயில் பயணங்களுக்கு SBB செயலியில் முன்பதிவு.

நவம்பர் தொடக்கத்தில் இருந்து, பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் SBB செயலியைப் பயன்படுத்தி சர்வதேச ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் அண்டை நாடுகள் மற்றும் BeNeLux நாடுகளுக்கான பயணச்சீட்டுகளை SBB செயலி மூலம் முன் பதிவு செய்யலாம்.

ஆனால் தற்போதைக்கு இரவு ரயில்களில் இடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதல், லண்டன், பிராட்டிஸ்லாவா மற்றும் பார்சிலோனாவிற்கான சர்வதேச பயணங்களுக்கும், அண்டை நாடுகளுக்கான பயணங்களுக்கும் SBB ஆனது செயலி  முன்பதிவுகளை வழங்கும்.

தற்போது,முன்பதிவுகளை SBB இணையதளம் மற்றும் பயண மையங்கள் வழியாகவே மேற்கொள்ள முடியும்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles