26.5 C
New York
Thursday, September 11, 2025

தாமதத்திற்கு பெயர்போன சூரிச்சும் சுவிசும்.

ஓகஸ்ட் மாதம் சூரிச் விமான நிலையம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட அதிகமான புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்களை பதிவு செய்துள்ளது.

ஆயினும், விமானங்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டனவா என்பதைக் காட்டும் ஆய்வின் முடிவு திருப்தியானதாக இருக்கவில்லை.

இதன்படி சூரிச் விமான நிலையமோ அல்லது மிகப்பெரிய விமான நிறுவனமான  சுவிஸ் விமான நிறுவனமோ, சிறப்பாகச் செயல்படவில்லை.

ஐரோப்பாவிற்கு அதிகம் புறப்படும் இருபது விமான நிறுவனங்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டனவா என்று ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, 43.03 சதவீத சுவிஸ் விமானங்கள், 15 நிமிடங்கள் அல்லது அதனை விடக் கூடிய தாமதம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஈஸிஜெட் மற்றும் ஐடிஏ ஏர்வேஸ் என்பன, சதவீத அடிப்படையில் இன்னும்  அதிகம் தாமதமாகின்றன.

ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில், சுவிஸ் முதலிடத்தில் உள்ளது.

யூரோவிங்ஸ் மற்றும் லுப்தான்சாவிற்குப் பின்னால் மூன்றாவது இடத்தில்  சுவிஸ் உள்ளது.

2.61 சதவீத சுவிஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூரிச் விமான நிலையமும் இந்த வகைகளில் சிறப்பாகச் செயல்படவில்லை. இங்கு 40.9 சதவீத விமானங்கள் தாமதமாகின்றன.

முனிச், லண்டன் கேட்விக் மற்றும் அன்டல்யா ஆகிய விமான நிலையங்கள் இன்னும் மோசமாக உள்ளன. ரோமில், அதே எண்ணிக்கையிலான தாமதமான விமானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூலம் –  Zueritoday

Related Articles

Latest Articles