5.3 C
New York
Tuesday, December 30, 2025

லொறியில் சிக்கி 5 வயதுக் குழந்தை பலி.

சூரிச்சில் உள்ள ஓபெரிடெனில் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் 5 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

குழந்தை மீது லொறி ஒன்று  மோதியதாக  சூரிச் கன்டோனல் பொலிஸ்  உறுதிப்படுத்தியது.

நேற்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக, இந்த விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் குழந்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

விபத்து காரணமாக, Alte Landstrasse இன் பாதிக்கப்பட்ட பகுதி இருபுறமும் உள்ள அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்பட்டது. தீயணைப்பு படையினரால் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சூரிச் கன்டோனல் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம் –  Zueritoday

Related Articles

Latest Articles