26.7 C
New York
Thursday, September 11, 2025

சுவிஸ் எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கிறது ஜேர்மனி.

விசா இல்லாமல் ஜேர்மனிக்குள் நுழைபவர்களைக்  குறைக்கும் வகையில், ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் அனைத்து ஜேர்மன் நில எல்லைகளிலும் தற்காலிக கட்டுப்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளை மட்டுப்படுத்துவது மட்டுமன்றி,  இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களால் தற்போது எதிர்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உள்நாட்டு பாதுகாப்பை  வலுப்படுவதும் இதற்குக் காரணம் ஆகும்.

அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் ஜேர்மனி அரசாங்கத்திற்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் நடுப்பகுதியில், போலந்து, செக் குடியரசு மற்றும் சுவிட்சர்லாந்தின் எல்லைகளில் நிலையான கட்டுப்பாடுகளுக்னு ஃபைசர் உத்தரவிட்டார்.

அதற்குப் பின்னர் ஒக்டோபர் முதல் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மூலம் –  Zueritoday

Related Articles

Latest Articles