7.1 C
New York
Monday, December 29, 2025

சனிஜாவை கட்சியை விட்டுத் தூக்குகிறது GLP கட்சி.

சுவிட்சர்லாந்தின் GLP கட்சித் தலைமை சனிஜா அமேதியை கட்சியில் இருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளது.

ஒப்பரேஷன் லிபரோவின் இணைத் தலைவரான சனிஜா அமேதி, இயேசுவையும் மரியாளையும் காட்டும் படத்தை சுடும் காட்சிகளை வெளியிட்டு,  கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

கட்சித் தலைமையின் பார்வையில், கிறீன் லிபரல் கட்சியில் அமேதி தொடர்ந்து உறுப்பினராக இருப்பது கட்சியின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று  GLP  கட்சி நேற்று மாலை அறிவித்தது.

அமேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் யேசு படம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி  பயிற்சி  பெற்றது குறித்து மன்னிப்பு கேட்டாலும், ஜிஎல்பியின் நற்பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம் –  Zueritoday

Related Articles

Latest Articles