26.1 C
New York
Wednesday, July 1, 2026

குடியேற்றத் தடைக்கு எதிரான நிலைப்பாட்டில் சுவிஸ் மக்கள்.

சுவிட்சர்லாந்தில்,  மூன்றில் இரண்டு பங்கு மக்கள், சனத் தொகை 10 மில்லியனை எட்டுவது குறித்து கவலை கொண்டுள்ளனர்.

எனினும்,  ஐந்தில் மூன்று பேர் குடியேற்றத் தடைக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளனர்  என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

டெமோஸ்கோப் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 6,300 பேர் நேர்காணல் செய்யப்பட்டு, முடிவு இன்று வெளியிடப்பட்டது.

கிராமப்புறங்களில் 74% மான மக்கள்,  தற்போது 9 மில்லியனாக இருக்கும் சுவிசின் சனத் தொகை, 10 மில்லியனாக அதிகரிப்பது குறித்து  கவலைப்படுகிறார்கள்.

புறநகர் பகுதிகளில், இந்த எண்ணிக்கை 65% ஆகவும், நகர்ப்புறங்களில், 63% ஆகவும் உள்ளது.

எனினும், 61% மான மக்கள்,  குடியேற்றத்திற்கான தடையை நிராகரித்துள்ளனர்.

 மூலம் – swissinfo.

Related Articles

Latest Articles