2 C
New York
Monday, December 29, 2025

குடிநீரில் பக்டீரியா – Alertswiss எச்சரிக்கை.

Biel/Bienne க்கு மேலே உள்ள Orvin நகராட்சியின் குடிநீரில் பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எனவே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் அல்லது துவைப்பதற்கும் சுத்திகரிக்கப்படாத குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று பேர்ன் கன்டோன், இந்த நகராட்சி மக்களுக்கு அறிவித்துள்ளது.

கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே குடிப்பதற்கு அல்லது சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்று பேர்ன் கன்டோன், நேற்று மாலை வெளியிட்ட “Alertswiss” எச்சரிக்கையில் கூறியுள்ளது.

Orvin நகராட்சியும் அதன் இணையதளத்தில் கொதிக்காத தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்துள்ளது.

 மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles