-3.3 C
New York
Sunday, December 28, 2025

சூரிச்சில் கொலை செய்யப்பட்ட கோபிநாத் யார்?

சூரிச் Glattbrugg இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர், திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதுடைய கோபிநாத் என்பவரே, அவர் வசித்து வந்த அறையில் இருந்து நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனுக்கு திருமணமாகி,  பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.

உயிரிழந்தவர் தமிழ்த் தேசிய பற்றுக் கொண்டவர் என்று சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உயிரிழந்த கோபிநாத்தின் எக்ஸ் தளத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவான அறிக்கைகள், தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் பதிவுகளும் காணப்படுகின்றன.

இவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார், சந்தேகத்தின்பேரில் அவருடைய அறையில் வசித்து வந்த சுவிஸ் நாட்டவர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles