Zurich Höngg இல் உள்ள Meierhofplatz இல் நேற்றுக்காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

இந்த விபத்தில் இரண்டு சாரதிகளுமே, காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தினால், 46 மற்றும் 89 பாதைகளில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து, பாதிக்கப்பட்டது.
விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
மூலம் – zueritoday


