11.9 C
New York
Sunday, March 29, 2026

9 மில்லியனைத் தாண்டியது சுவிஸ் சனத்தொகை.

சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக வசிப்போர் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் முதல் முறையாக ஒன்பது மில்லியனைத் தாண்டியுள்ளது.

இரண்டாவது காலாண்டின் முடிவில், 9,002,763 பேர் சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக வாழ்கின்றனர் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சனத்தொகை 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக (2012 முதல் 2024 வரை) அதிகரிப்பதற்கு, 12 ஆண்டுகள் ஆகியுள்ளது.

சுவிசில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் 6,560,361 பேர் சுவிஸ் நாட்டவர்கள் என்றும், 2,442,402 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்களில், 20 தொடக்கம் 64 வயதுக்கு இடைப்பட்டவர்கள், சுமார் 5.460 மில்லியன் பேர் என்றும், குழந்தைகள், இளைஞர்கள் சுமார் 1.790 மில்லியன் என்றும்,  65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.753 மில்லியன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles