-0.7 C
New York
Sunday, December 28, 2025

அமோனியா வாயு கசிவினால் 50 பேர் பாதிப்பு.

Zell இல் உள்ள இறைச்சி உற்பத்தி நிறுவனமான, பெல் நிறுவனத்தின் கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட அமோனியா  வாயுக் கசிவினால், சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் இருந்து சுமார் ஐந்து லிட்டர் அமோனியா வாயு கசிந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட 52 பேர் அம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில், ஐந்து பேர்  பலத்த காயம் அடைந்துள்ளனர். 47 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமோனியா கசிவு காரணமாக மதியத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதாக  தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியது.

துர்நாற்றம் வீசியதால் கசிவு ஏற்பட்டதை உணர்ந்த ஊழியர்கள், உடனடியாக கட்டடத்தை வெளியேறியதால் ஆபத்து அதிகம் ஏற்படவில்லை.

வாயுக் கசிவினை கட்டுப்படுத்தி நிலைமையை சீர்படுத்துவதற்காக,  75 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை  Lucerne பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles