29.8 C
New York
Thursday, July 2, 2026

வீட்டின் மீது மோதிய கார் – இளைஞன் பலி.

Thurgau கன்டோனில் உள்ள Märstetten இல், கார் ஒன்று, வீட்டின் சுவர் மீது மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

புதன்கிழமை மாலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய போர்ச்சுக்கீசிய இளைஞன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீட்டுக்குள் இருந்த 43வயதுடைய ஆண் ஒருவர் குறிப்பிடத்தக்க காயம் அடைந்தார்.

இந்த விபத்தில் வீடும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.

உயிரிழந்த இளைஞன் காரை மிக வேகமாக செலுத்தி வந்து மோதினார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles