26.5 C
New York
Tuesday, August 18, 2026

நாளை தேர்தலுக்குத் தயார்- நீண்ட வாக்குச்சீட்டினால் சிரமம்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இன்று காலை மாவட்ட பிரதான தேர்தல் மையங்களில் இருந்து, வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்களிப்பிற்குத் தேவையான பொருட்களுடன் பேருந்துகள் மூலம், பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

39 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால் இம்முறை இரண்டேகால் அடி நீளமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.

அவற்றை தேர்தல் அதிகாரிகள் தூக்கிச் செல்வதற்குப் பெரிதும் சிரமப்பட்டதை காண முடிந்தது.

Related Articles

Latest Articles