சுவிட்சர்லாந்தின் மிகவும் கவர்ச்சிகரமான நகராட்சியாக, Lucerne கன்டோனில் உள்ள Meggen நகராட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சூரிச், பாஸல் மற்றும் பேர்ன் போன்ற பெரிய நகரங்கள் இந்த தெரிவில் கணிசமாக பின்தங்கியுள்ளன.
இந்த தரவரிசையில், சுமார் 1,000 நகராட்சிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நகராட்சிகளின் வரி, பாதுகாப்பு, சொத்து மதிப்பு, பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு, அமைவிடம், வணிக வசதிகள் போன்ற 51 அளவுகோல்களின்படி மதிப்பீடு செய்யப்பட்டன.
Hergiswil (NW) நகராட்சி இரண்டாமிடத்தையும், Oberkirch (LU) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
Zug நான்காவது இடத்திலும், Cham (ZG) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
Lucerne, Nidwalden, Zug, Zurich மற்றும்Schwyz ஆகியவற்றைச் சேர்ந்த நகராட்சிகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.
பெரிய நகராட்சிகளான Zurich 54 ஆவது இடத்திலும், Basel 486 ஆவது இடத்திலும் Bern 491 ஆவது இடத்திலும் இருக்கின்றன.
மூலம் – 20min