2 C
New York
Monday, December 29, 2025

பாடசாலையில் தீவிபத்து – 200 குழந்தைகள் தப்பினர்.

Winterthur இல்  உள்ள Gutschick பாடசாலைக் கட்டடத்தில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து 200 மாணவர்கள் கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்டு மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.

பொலிசாரும் தீயணைப்பு பிரிவினரும் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கழிப்பறையிலேயே தீ பரவி  சேதத்தை ஏற்படுத்தியது. தீ பரவியதற்கான காரணம் தெரியவரவில்லை.

இந்த தீவிபத்தினால் எவருக்கும்  காயம் ஏற்படவில்லை.

நேற்றைய தினம் இந்த பாடசாலையில் அவசர கால வெளியேற்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Latest Articles