12.6 C
New York
Wednesday, October 7, 2026

6 கிலோ கொகெய்னுடன் சிக்கினார் இளம்பெண்.

சூரிச் கன்டோனல் பொலிசார், நேற்றுக்காலை சூரிச் விமான நிலையத்தில் போதைப் பொருளைக் கடத்த முயன்ற  பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

அவர் தனது பொதிகளில் சுமார் ஆறு கிலோகிராம்  கொகெய்ன் போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

- Advertisement -

சாவோபோலோவில் இருந்து சூரிச் வழியாக அவர்,  லண்டனுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

பயணிகளின் பொதிகளை சோதனை செய்தபோது, ​​ஒரு சூட்கேஸில், பொய்யான அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கிலோகிராம் கொகெய்ன் போதைப்பொருளை கன்டோனல் பொலிசார் கைப்பற்றினர்.

23 வயதான பிரேசிலியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles