20.1 C
New York
Wednesday, September 10, 2025

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் அனுர!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சற்றுமுன்னர் இதனை அறிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

2024 தேர்தல் முடிவுகளுக்கு அமைய முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் அனுரகுமார திசநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளையும், சஜித் பிரேமதாச 4,363,035 (32.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, அனுரகுமார திசநாயக்க வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப் பெற்ற போதும் 50 சதவீத வாக்கினை பெறாத காரணத்தினால் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கை இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச 167,867 விருப்பு வாக்குகளையும், அனுரகுமார திசநாயக்க 105,264 விருப்பு வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கமைய, மொத்த வாக்குகளாக அனுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளை பெற்று இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச மொத்தமாக 4,530,902 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.

Related Articles

Latest Articles