17.5 C
New York
Wednesday, September 10, 2025

அகதிகளின் காத்திருப்பு காலத்தை ரத்து செய்யும் கோரிக்கை நிராகரிப்பு.

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  ஐந்து வருட காத்திருப்பு காலத்தை ரத்து செய்யும் யோசனையை சூரிச் கன்டோன் வாக்காளர்கள்  நிராகரித்துள்ளனர்.

பெப்ரவரியில் கன்டோனல் நாடாளுமன்றத்தால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை 54% வாக்காளர்கள் நிராகரித்தனர்.

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினர்  நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாதவர்களில் 90 வீதமானவர்கள் எப்படியும் சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதால் காத்திருப்பு காலம் தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனவே அவர்களுக்கு விரைவாக பயிற்சி அளிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நாடாளுமன்றம் தெரிவித்தது.

வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி இதற்கு உடன்படவில்லை. காத்திருப்பு காலத்தை தக்கவைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தநிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சூரிச் இன்னும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றப்படக் கூடாது என்று அது வாதிட்டது:

“எவ்” அந்தஸ்துள்ள வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது சாத்தியமாகும் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles