29.5 C
New York
Thursday, July 2, 2026

ட்ரக் மீது மோதியது ட்ராம் – ஒருவர் காயம்.

சூரிச்சில், Löwenbräu நிறுத்தத்திற்கு அருகில் வெள்ளை நிற ட்ரக் மீது ட்ராம் மோதிய விபத்தில், ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

4 வது பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ட்ராம் வண்டியே, ட்ரக் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார், ஆனால் காயங்களின் தீவிரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

இதனால் பொது போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.

Bahnhofquai மற்றும் Escher-Wyss-Platz பாதையில் 4, 13 மற்றும் 17 ஆகிய லைன்களில், போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

எனினும். காலையிலேயே இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.

Related Articles

Latest Articles