26.7 C
New York
Thursday, September 11, 2025

சாவுக் கருவியை பயன்படுத்தி அமெரிக்க பெண் மரணம்- உதவிய பலர் கைது.

Schaffhausen இல் 64 வயதான அமெரிக்கப் பெண் முதல் முறையாக தற்கொலைக்குப் பயன்படுத்தும் கருவியினால் உயிரிழந்துள்ளார்.

வலியின்றி இறக்க விரும்புகின்றவர்களுக்கு உதவும் வகையில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்தவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், பெண்ணின் மரணம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து அதற்கு உதவிய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து வந்த பெண் Merishausen காட்டுப் பகுதியில் நைதரசன் கப்சூலைப் பயன்படுத்தி, மரணத்தை தழுவியுள்ளார்.

நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தை கேள்வியுள்ள பொலிசார் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அவருக்கு உதவிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles