21.6 C
New York
Friday, September 12, 2025

புகையிலைப் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.

புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும், புதிய பெடரல்  சட்டம் சுவிட்சர்லாந்து முழுவதும்  இன்று அமுலுக்கு வந்துள்ளது.

புதிய புகையிலை பொருட்கள் சட்டம், சிகரெட், ஸ்னஃப், இ-சிகரெட் மற்றும் ஏனைய புகையிலையுடன் தொடர்புடைய பொருட்களை விற்பது தொடர்பான கன்டோனல்  விதிகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

Schwyz , Appenzell Innerrhoden கன்டோன்களில் குழந்தைகள் சிகரெட்டுகளை வாங்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. அதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் வயது இருக்கவில்லை.

ஆனால் ஏனைய கன்டோன்களில், புகையிலைப் பொருட்களை வாங்குபவர்களுக்கு 16 அல்லது 18 வயது இருக்க வேண்டும்.

புதிய சட்டத்தின்படி, அனைவரும் புகையிலை பொருட்களை வாங்க சட்டப்பூர்வ வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

புதிய பெடரல் சட்டம் புகையிலை விளம்பரத்தையும் கட்டுப்படுத்துகிறது. பொதுச்சொத்தில் புகையிலை விளம்பரங்கள் அனுமதிக்கப்படாது.

மேலும் பொதுச் சொத்துக்களில் இருந்து பார்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே தனியார் சொத்துக்களில் அந்த விளம்பரங்கள் அனுமதிக்கப்படும்.

சிறார்களை இலக்காகக் கொண்ட நிகழ்வுகளில் இனி புகையிலை அனுசரணையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். புகையிலை நுகர்வு தொடர்பான இலவச விளம்பர பரிசுகளும் இனி அனுமதிக்கப்படாது.

ரயில் நிலையங்களில் இ- சிகரெட்டுகளை புகைப்பதும் கட்டுப்படுத்தப்படும், புகைபிடிக்கும் பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

புகைப்பழக்கத்திற்கு எதிரான விதிகள் இப்போது அனைத்து புகையிலை பொருட்களுக்கும் பொருந்தும்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles