25 C
New York
Sunday, June 28, 2026

தபால் பேருந்து மோதி பெண் பலி.

சூரிச்சில் தபால் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Bonstetten ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த  தபால் பேருந்தின் பின்னால், பெண் ஒருவர் வீதியில் நுழைந்தார்.

அப்போது  தபால் பேருந்து பின்நோக்கி செலுத்தப்பட்ட போது, பெண்ணின் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில் 77 வயதான பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி, விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார் என்று சூரிச் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles