சூரிச்சில் தபால் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Bonstetten ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தபால் பேருந்தின் பின்னால், பெண் ஒருவர் வீதியில் நுழைந்தார்.
- Advertisement -

அப்போது தபால் பேருந்து பின்நோக்கி செலுத்தப்பட்ட போது, பெண்ணின் மீது மோதியது.
இந்தச் சம்பவத்தில் 77 வயதான பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி, விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார் என்று சூரிச் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.


