26.7 C
New York
Thursday, September 11, 2025

குப்பையில் கிடந்த ஓவியம் 67,500 பிராங்கிற்கு ஏலம்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த  உடைந்து போன ஓவியம் ஒன்று 67,500 பிராங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அந்த ஓவியத்தை David Vinckboons  என்ற டச்சு ஓவியர் வரைந்திருந்தார். அவர் 1576 முதல் 1632 ஆண்டு வரை வாழ்ந்த மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவராவார்.

அவரது அந்த ஓவியம், மூன்று துண்டுகளாக உடைந்த நிலையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடந்தது.

அதனை எடுத்து சரிப்படுத்திய பின்னர் சுவிஸ் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது.

அஇதற்கு 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் பிராங் வரை கிடைக்கும் என்றே சுவிஸ் ஏல மையம் மதிப்பீடு செய்திருந்தது.

எனினும் யாரும் எதிர்பாராத வகையில் அந்த ஓவியம், 67,500 பிராங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles