26.7 C
New York
Thursday, September 11, 2025

குடியிருப்பில் மர்ம வெடிப்பு – ஒருவர் சடலமாக மீட்பு.

La Tour de-Peilz VD இல் உள்ள வாடகை குடியிருப்பில் திங்கள்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

வெடிப்பு சம்பவத்தை அடுத்து  திங்கள் காலை 10.20 மணியளவில் La Tour de-Peilz இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெடிப்பை அடுத்து பெரியளவில் தீ பரவியுள்ளது.

இதனால் ஏற்பட்ட புகையை சுவாசித்த இரண்டு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெடிப்புக்கான காரணம், சூழ்நிலைகள் குறித்து இன்னமு் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

பொலிசாரும்,  சட்டமா அதிபர் அலுவலகமும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles