26.7 C
New York
Thursday, September 11, 2025

3 நாட்களுக்குப் பின் ஜெனிவாவில் குடிநீர் விநியோகம் ஆரம்பம்.

ஜெனிவா கன்டோன்  முழுவதும் மீண்டும் தண்ணீர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

பல இடங்களில்  குழாய் நீரைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பின்னர், குழாய் நீரைப் பருகுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

பகுப்பாய்வு முடிவுகள் குடிநீருக்கான அளவுகோல்கள் பூர்த்தி செய்வதாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களாக மூடப்பட்டிருக்கும் குழாய்களை தொடர்பாக சிறப்பு நடவடிக்கைகள்  எதுவும் எடுக்க வேண்டியதில்லை என்றும், தண்ணீர் தெளிவாகவும், புதியதாகவும் வரும் வரை தண்ணீரை  திறந்து விட வேண்டும் என்று ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அமுலில் இருந்த குடிநீர் விநியோக முறை படிப்படியாக நீக்கப்படும்.

இன்று மதியம் முதல் நடமாடும் தொட்டிகள் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles