0.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச் தீவிபத்து – கடும் புகையால் திணறும் தீயணைப்பு பிரிவினர்.

சூரிச்சின் 11வது மாவட்டத்தில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு கட்டடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ள போதும், புகையை அகற்றும் பணி சிக்கலானதாக உள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்தில் தண்ணீர் குழாயும் எரிந்து நாசமாகியுள்ளது.

இதனால் தரை தளத்தில் இருந்து நிலத்தடி கார் தரிப்பிடத்திற்குள் தண்ணீர் கசிந்தது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சேதத்தின் அளவு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மூலம் -zueritoday

Related Articles

Latest Articles