25.4 C
New York
Thursday, August 13, 2026

பார்பிக்யூ அடுப்பில் தீ மூட்டிய இளைஞனும் யுவதியும் படுகாயம்.

Ticino கன்டோனில் உள்ள தனியார் தோட்டத்தில்  நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இரு இளையோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எரியக் கூடிய திரவத்தைப் பயன்படுத்தி, பார்பிக்யூ அடுப்பிற்குத் தீ மூட்ட முயன்ற போது, 18 வயதுடைய சுவிஸ் இளைஞனுக்கு பலத்த எரிகாயம் ஏற்பட்டது.

அருகில் இருந்த 20 வயதுடைய சுவிஸ் பெண்ணும் படுகாயமடைந்தார்.

நேற்று பிற்பகல் 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஆரம்ப மருத்துவ மதிப்பீடுகளின்படி, இளம் பெண் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

அதே நேரத்தில் ஆணின் நிலையும் மோசமாக உள்ளது.

இந்த தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles