4.4 C
New York
Monday, December 29, 2025

வண்ணமயமாக காட்சியளித்த வானம்.

சுவிட்சர்லாந்தில் ஆங்காங்கே பல இடங்களில் வானம் வண்ணமயமாக காட்சியளித்தது.

மேக மூட்டம் காரணமாக, இந்தக் காட்சி எல்லா இடங்களிலும்  தென்படவில்லை.

வட அரைக்கோளத்தில்,  அவ்வாறான காட்சி northern lights  என்று அழைக்கப்படுகின்றது.

எனினும், அல்பைன் பகுதியில் இத்தகைய வடக்கு விளக்குகள் அரிதாகவே காணப்படுகின்றன.

சூரிய வெடிப்புகளால் ஏற்படும் மின்காந்தப் புயலில் வெளிப்படும் துகள்கள்  பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் உள்ள ஒக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்களுடன் மோதும் போது, இவ்வாறான காட்சி ஏற்படுகின்றது.

இது வெவ்வேறு வண்ணங்களை உருவாக்குகிறது.

பச்சை வண்ணம், 100 முதல் 200 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து உருவாகிறது. சிவப்பு வண்ணனம்  200 கிலோமீட்டர் உயரத்தில் உருவாகிறது.

மூலம் -Bluewin

Related Articles

Latest Articles